சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் 3 பெண்கள் தனிச்சிறையில் கைதிகள் துணி துவைக்க, சிறைத்துறை சார்பில் 760 லட்சம் செலவில் வாஷிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணிகளை துவைக்கலாம் என்றும் இத்திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
