துருக்கி நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டவர்களுடன் வீட்டை பகிர்ந்து உதவும் இலங்கை பெண்


துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை பெண் ஒருவர் அடைக்கலம் வழங்கி உதவி செய்து வருகிறார்.

துருக்கி நிலநடுக்கம்

 
துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 45,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

துருக்கி நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டவர்களுடன் வீட்டை பகிர்ந்து உதவும் இலங்கை பெண் | Sri Lankan Woman Humanitarian Act In Turkey QuakeAFP/Getty Images

அத்துடன் 200க்கும் குறைவான இடங்களில் மனிதர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடைக்கலம் வழங்கி உதவும் இலங்கை பெண்

இந்நிலையில் துருக்கியின் அங்காராவில் வசித்து வரும் தில்ஹானி சந்திரகுமார் என்ற இலங்கை பெண் ஒருவர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடைக்கலம் வழங்கி உதவி செய்து வருகிறார்.

தில்ஹானி சந்திரகுமார் இதற்காக அவரது இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கியுள்ளார், இங்கு தற்போது ஆறு குடும்பங்கள் வரை தங்கியுள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டவர்களுடன் வீட்டை பகிர்ந்து உதவும் இலங்கை பெண் | Sri Lankan Woman Humanitarian Act In Turkey Quake

இது தொடர்பாக பேசியுள்ள அவர், இந்த செயலால் எனக்கும் என் கணவருக்கும் கிடைக்கும் நன்மை மன மகிழ்ச்சியாகும், இதுதான் நமது மனிதநேயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தகைய துயரமான நேரங்களில் தான் உயிரை விட பணம் முக்கியம் இல்லை என்பதை உணர முடிவதாக தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.