வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கிராமப்புற மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைவதால், மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நீட் தேர்வில் விலக்கு கோருவதற்கான மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
![]() |
நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால் நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அந்த தீர்ப்பு தமிழகத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement