Mayilsamy:எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து பல்ஸ் ரொம்ப குறைஞ்சுடுச்சு: அன்றே பேசிய நிஜ ஹீரோ மயில்சாமி

Mayilsamy about death:தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு நிலைமை மோசமாக இருந்தது பற்றி மயில்சாமி முன்பு ஒரு முறை பேசியிருக்கிறார்.

மயில்சாமிநகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை காலமானார். இரவு முழுவதும் கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் இருந்த மயில்சாமி அங்கிருந்து இரவு 3 மணிக்கு வீட்டிற்கு கிளம்யிருக்கிறார். வீட்டிற்கு வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். இந்நிலையில் மயில்சாமி தன் உடல்நலம் பற்றி பேசியது குறித்து தற்போது ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
ஹார்ட் அட்டாக்முன்பு பள்ளி விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி பேசியதாவது, அன்று இரவு 1 மணிக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. ஸ்ரீதர், தாடி ஸ்ரீதர்னு சொல்லுவாங்க. அவர் எனக்கு அண்ணன் தான். அவரும், அவங்க மிஸ்ஸஸும் சேர்ந்து தான் என்னை ஆம்புலன்ஸில் வச்சு, முகத்தில் ஒன்னு வப்பாங்களேன், மூச்சுவிடுவது அதை வச்சு, ஹார்ட் பீட் ரொம்ப மைனஸ் பாயிண்டுக்கு வந்தது. ஹார்ட்பீட் குறைந்தது இவ்வளவு இருக்கணும் என்று சொல்வார்கள். அது பாதிக்கு பாதி குறைந்துவிட்டது என்றார்.
இறப்புமயில்சாமி மேலும் கூறியதாவது, ஊசியை போட்டு, 4 மணிநேரத்திற்குள் ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு போயிடுங்கனு சொன்னாங்க. போய் சேர்ந்தாச்சு, வந்தாச்சு, இன்னும் எத்தனை நாள் இருப்போம்கிறது நமக்கு தெரியாது. அது தான் ஆண்டவன். எப்ப போவன்னு தெரியாது. பிறந்தது தெரியும். கல்யாண நாள் தெரியும். எல்லாமே தெரியும். எப்ப இறப்ப, அது தெரிந்தால் இன்னும் எவ்வளவு அநியாயம் நடக்கும். யோசனை செய்து பாருங்கள் என்றார்.
சாதிநான் சாதி மதம் பார்க்காததற்கு என்ன காரணம் என்றால் என் கூட வண்டி ஓட்டிட்டு வந்தவர் ஒரு முஸ்லீம். எனக்கு துணையாக வந்தவர் ஒரு கிறிஸ்டியன். நான் இந்து. ஆனால் எங்களுக்குள்ள இந்த சாதி மதம் எல்லாம் கிடையாது. ஒரே தட்டில் கூட சாப்பிட நாங்க மூன்று பேரும் தயார். எங்க பாலிசி அப்படித் தான். இறைவன் வந்து இப்படித் தான் இருக்கணும், அப்படித் தான் இருக்கணும் என்று சொல்லவே இல்லை என்று மயில்சாமி பேசியது பற்றி தற்போது ரசிகர்கள் பேசுகிறார்கள்.

மதம்மயில்சாமி மனிதர்களை மதித்தவர். மதம், சாதியின் அடிப்படையில் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. தன் மூத்த மகன் அருமைநாயகம் என்கிற அன்புவுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். தமிழக சட்டசபையின் துணை சபாநாயகரான கு. பிச்சாண்டியின் இளைய மகளை தான் அன்புவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த திருமணத்தை முன்நின்று நடத்தியதே முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான்.

​Mayilsamy:தமிழக சட்டசபை துணை சபாநாயகர் தான் மயில்சாமியின் சம்பந்தி, ஆனால்…

சூப்பர் ஹீரோMayilsamy:கடன் வாங்கி, நகைகளை அடமானம் வைத்து ஏழைகளுக்கு உதவிய மயில்சாமிமயில்சாமி படங்களில் வேண்டுமானால் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் காமெடியன் அல்ல ஹீரோ. அதுவும் சூப்பர் ஹீரோ. அல்லல்படுபவர்களுக்கு தானாக சென்று உதவி செய்யும் யாரும் சூப்பர் ஹீரோ தான். அப்படி என்றால் எத்தனையோ பேருக்கு கேட்காமலேயே உதவிய மயில்சாமி சூப்பர் ஹீரோ தானே. ஏழை மக்களுக்கு உதவி செய்ய கடன் வாங்கியிருக்கிறார், வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்திருக்கிறார். அவரின் இந்த குணம் தான் அவருக்கு சல்யூட் அடிக்க வைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.