Mayilsamy: மயில்சாமி மரணம்.. கதறி அழுத எம்எஸ் பாஸ்கர்.. கடைசி வரை நகரவில்லை.. கலங்க வைத்த நட்பு!

மயில்சாமியின் மரணத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.

மயில்சாமி மரணம்பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் விடிய விடிய கண் விழித்து வழிபாடு செய்தார் மயில்சாமி. அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி, பின்னர் மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.​ நோ… ஐஸ்வர்யாவுக்கு ரஜினி போட்ட ஆர்டர்!​
அஞ்சலிநேற்று காலை முதல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அலையாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். 57 வயதே ஆன மயில்சாமியின் திடீர் மரணம் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ளது. ​ Ajith, Ak 62: ஏகே 62 படத்தில் அஜித்தை புரட்டி எடுக்கப்போவது இவர்தானாம்… ​
எம்எஸ் பாஸ்கர்மயில்சாமி இறந்து விட்டார் என்ற தகவலை கேட்டதுமே அவருடைய நெருங்கிய நண்பரான எம்எஸ் பாஸ்கர் கதறியப்படியே அவரது வீட்டிற்கு சென்றார். எம்எஸ் பாஸ்கருக்கும் மயில்சாமி குடும்பத்திற்கும் நல்ல பழக்கம் என்பதால் அவரது மகன்களும் அவரை கட்டியணைத்தப்படி கதறினர். மயில்சாமியின் மனைவில் நடிகர் எம்எஸ் பாஸ்கரை அண்ணா என்றே அழைப்பார்.
​ Mayilsamy: நெடுங்கால நண்பர் மயில்சாமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்!​
இடி தாக்கியது போலமயில்சாமியின் உடலை பார்த்ததும் டேய்… என்னாச்சுடா… எந்திரிடா என கதறினார் எம்எஸ் பாஸ்கர். பின்னர் வெளியே வந்த அவர், தனக்கு பேச்சே வரவில்லை என்றும் இடிதாக்கியது போல ஒரு நிலையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார். கடைக்கு போனால் கூட, மயில்சாமியின் வீட்டுக்கு போய் பேசிவிட்டுத்தான் வருவேன் இனி என்ன செய்வேன் என்று கண்ணீர் விட்டார்.
​ Mayilsamy: டீக்கடையிலேயே மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட மயில்சாமி.. திடுக் தகவல்!​
மாமான்னு கூப்பிடுவான்மேலும் தன்னை மாமா என்று ஆசையாக கூப்பிடுவான், அவருடைய மனைவி அண்ணா வாங்க என்று அழகாக அழைப்பார்கள் என உருக்கமாக பேசிய எம்எஸ் பாஸ்கர், மயில்சாமி என்பவர் ஒரு சாதாரண மனிதன் இல்லை என்றார். மேலும் யாரும் பசி என்று அவர் முன்னால் வாடி நின்றுவிட்டால் துடித்துவிடுவார் என்றும் கூறினார். மேலும் ஒருமுறை படப்பிடிப்பின் போது வெள்ளரிக்காய் கொண்டு வந்து விற்ற பாட்டியிடம் கூடையோடு வெள்ளரிக்காயை வாங்கிய மயில்சாமி எல்லாருக்கும் கொடுங்க என்றார் என அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
​ Mayilsamy: அன்பே கடவுள் இல்லத்தில் இருந்து விடைபெற்றார் மயில்சாமி.. உடல் தகனம்.. கதறி அழுத மகன்கள்!​
வள்ளலாக வாழ்ந்தார்மேலும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் தானும் மயில்சாமியும் ஒன்றாகதான சாப்பிடுவோம் ஒன்றாக தூங்குவோம் என்று கூறிய மயில்சாமி, அப்படி சகோதரனாக, மைத்துனனாக, வள்ளலாக வாழ்ந்தவன் மயில்சாமி என கதறினார். மூன்று நாளுக்கு முன்பு தன்னிடம் தொலைபேசியில் பேசிய மயில்சாமி, தன்னை சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார் என்றும் தான் படப்பிடிப்பில் இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார் எம்எஸ் பாஸ்கர்.
​ Rajinikanth, Mayilsamy:’மன்னிப்பு கேட்க நினைத்தேன்’ ரஜினிக்கு தீராத குற்ற உணர்ச்சியை கொடுத்த மயில்சாமி…​
இறுதி ஊர்வலத்திலும்மயில்சாமி மிகப்பெரிய சிவபக்தர் என்றும் சிவன் மயில்சாமியை அழைத்துக் கொண்டார் என்றும் மயில்சாமியின் ஆன்மா சிவன் நிழலில் இளைப்பாறட்டும் என்றும் கண்ணீர்மல்க கூறினார். நேற்று முதல் மயில்சாமியின் வீட்டிலேயே அவருடைய முகத்தை அடிக்கடி பார்த்தப்படி இருந்து வந்தார் எம்எஸ் பாஸ்கர். இன்று நடிகர் ரஜினிகாந்த் வந்த போது கூட, போயிட்டான்ய்யா என்று கதறி அழுதார். தொடர்ந்து மயில்சாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற எம்எஸ் பாஸ்கர், அவரது தலை பக்கத்தில் இறுக்கமாக அமர்ந்து அவரது முகத்தை பார்த்தப்படியே இருந்தார்.

​ Mayilsamy: மயில்சாமிக்கு கிடைத்த பாக்கியம்… அண்ணாமலையார் கோவிலில் இருந்து வந்த இறுதி மரியாதை… ரசிகர்கள் உருக்கம்!​
Mayilsamy

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.