வாஷிங்டன்: இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்ப மண்டல சூறவாளி காற்று உருவாகி உள்ளதாகவும், இது மொரிஷியஸ் தீவு நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச விண்வெளி மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மொரிஷியஸ் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், புயல், இன்று(2023 பிப்.,21) மொரிஷியசை தாக்கக்கூடும். சூறாவளியால் மணிக்கு 120 கி மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இந்த புயலால் மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
புயல் ஒரு பயங்கரவமான சூறாவளியாக தாக்கும். கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனால், கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து மொரிஷியசில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த புயல் காரணமாக தென் ஆப்ரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement