உலகின் மிகச்சிறந்த புகைப்படத்துக்கான நேஷனல் ஜியோகிராபிக் பரிசை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியன் எடுத்த கழுகுப் படங்கள் பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார்.

இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் புகைப்படத்துக்காக விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என்ற நான்கு வகைகளில் கிட்டத்தட்ட 5,000 படங்கள் போட்டியில் பங்கேற்றன.
அதில் கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த புகைப்படங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் அலாஸ்காவின் சில்காட் பால்ட் என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்பபட தொகுப்பிற்கு வெண்தலைக் கழுகுகளின் நடனம் (Dance of Bald Eagles) என்று புகைப்பட கலைஞர் கார்த்திக் சுப்ரமணியன் தலைப்பு வைத்துள்ளார்.
newstm.in