ஈரோடு: திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு வேட்டை யாடிய அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பால் விலை […]
