மயிலாடுதுறை: சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்த நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நிர்வாகி செண்பகசாமியை புதுப்பட்டினம் போலீசார் கைது செய்தனர். 2006 சுனாமியில் பாதித்தவர்கள் வீட்டுமனை பெற்ற நிலையில் எஞ்சியவர்களுக்கு வீட்டு மனை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். பழையார் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாகக்கூறி 40 பேரிடம் ரூ.8 லட்சம் வசூல் செய்துள்ளார்.