சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தில், மார்ச் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் மதுரை மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 5, 6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். இதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.