சீர்காழி: போலி பட்டா தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கைது

சீர்காழி அருகே இலவச பட்டா வாங்கித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையாறு மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்த கிராமத்தில் வசித்த மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சி இருந்த இடங்களை தற்போது வீடில்லாத மக்களுக்கு முறையாக பிரித்து வழங்க வேண்டும் என கிராமத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
image
இந்நிலையில் கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கித் தருவதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் 40-க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ20 ஆயிரம் பெற்று மோசடி செய்ததோடு சிலருக்கு போலி பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்துஇருவரையும் கைது செய்ய வலியுறுத்தி பழையாறு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடந்த 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், போலியாக பட்டா தயார் செய்ததாகவும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செண்பகசாமியை புதுப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
image
இதைத் தொடர்ந்து அவரை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.