வாஷிங்டன் :’டுவிட்டர்’ நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்ற வேண்டியிருந்ததாக, அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு இடையே, கடந்த மூன்று மாதங்களாக, டுவிட்டர் நிறுவனத்தை திவாலாகாமல் காப்பது மிகுந்த கடினமான பொறுப்பாக தனக்கு இருந்ததாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது:
டுவிட்டருக்கு இன்னும் நிறைய சவால்கள் உள்ளன. ஆனால் அதற்கான சீர்திருத்தங்களை கடைப்பிடித்தால் டுவிட்டர் சிதைந்து போகும். இருந்த போதும், டுவிட்டருக்கு மக்கள் அளித்த வரவேற்பு மிகவும் பாராட்டத்தக்கது.கடந்த நவம்பரில் ஒரு நாளைக்கு 40 லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதால் தான், பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.நிறுவனத்தில் செய்த சீர்திருத்தங்களைப் போல், டுவிட்டர் பக்கங்களிலும் சில அதிரடி மாற்றங்களை அடுத்தடுத்த வாரங்களில் மேற்கொள்ள உள்ளதாகவும் எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement