மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

முறைகேடுகளை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்களில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்குகின்றனர். அதே போல் தேவஸ்தான ஊழியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்கின்றனர்.

எவ்வளவோ முயற்சித்தும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் இதை தடுக்க முடியவில்லை. எனவே இதனை அதிநவீன தொழில் நுட்ப ரீதியில் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒரு அதிரடி நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

அதாவது, முறைகேடுகளை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவர உள்ளது.

வரும் 1ஆம் தேதி முதல், லட்டு வாங்குவது, தங்குவதற்காக அறைகளை பெறுவது, அறைகளை பெற்று கொண்டபோது செலுத்தப்பட்ட டெபாசிட் பணத்தை திரும்ப பெறுவது போன்றவற்றிற்காக தொடர்ந்து கவுண்டர்களுக்கு செல்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.

அங்கிருக்கும் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ் ஐடென்டிஃபிகேஷன் சாப்ட்வேர் இந்த நபர் இந்த வாரத்தில் இத்தனை நாள் வந்திருக்கிறார் என்று காட்டி கொடுத்து விடும். முதலில் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்து தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் தொடர்ந்து இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.