இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு, இளம்பெண் ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக அளவில் பெண் ரசிகர்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான். அதிலும் விராட் கோலிக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர். அவரது சிறப்பான ஆட்டத்தை கடந்து, அவரின் ஸ்மார்ட்டான லுக்கால் பெண் ரசிகர்கள் ஏராளம்.
அதில் ஒரு ரசிகை, கோலியின் மெழுகு சிலைக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள அருகாட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள விராட் கோலியின் சிலைக்கு அப்பெண் முத்தம் கொடுத்துள்ளார்.
சிலையின் கழுத்தில் கையை போட்டு, உண்மையான நபருக்கு எதிரே நிற்போது போல் உணர்ந்து அப்பெண் சிலைக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவுக்கு தாறுமாறாக கமென்ட் செய்து வருகின்றனர். இதையெல்லாம் பார்க்க உயிரோடு இருக்கிறேனே என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
newstm.in