3-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியில் இணையும் பவுலர்! பல அதிரடி மாற்றங்களால் இந்தியாவுக்கு நெருக்கடி


இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி பல அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது.


இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி

இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. 

2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

3-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியில் இணையும் பவுலர்! பல அதிரடி மாற்றங்களால் இந்தியாவுக்கு நெருக்கடி | Starc Set To Play In India Vs Australia 3Rd Test


அணியில் மாற்றம்

3வது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். 

மேலும் பேட் கம்மின்ஸ் தனது சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


அணியில் இணையும் மிட்செல் ஸ்டார்க்

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரீன் கீரின் அணியில் இணைவார்கள் எனத் தெரிகிறது. 
இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள். 

3-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியில் இணையும் பவுலர்! பல அதிரடி மாற்றங்களால் இந்தியாவுக்கு நெருக்கடி | Starc Set To Play In India Vs Australia 3Rd TestGetty

இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கேமரின் கீரினும் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் 3 வது டெஸ்ட் போட்டி இந்திய அணியினருக்கு சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் திகதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

3-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியில் இணையும் பவுலர்! பல அதிரடி மாற்றங்களால் இந்தியாவுக்கு நெருக்கடி | Starc Set To Play In India Vs Australia 3Rd TestReuters 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.