8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 7வது ஊதியக் கமிஷனுக்குப் பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்க உள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல காரணங்களால் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என நம்பப்படுகிறது. இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரைத் தவிர வேறு ஒரு சூத்திரம் மூலம் ஊதியம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பழைய ஊதியக் கமிஷனை விட இந்த ஊதியக் கமிஷனில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஊழியர்களின் சம்பளம் எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

7வது ஊதியக் குழுவின் கீழ், தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. மேலும் இந்த சம்பளத்திற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு அமல்படுத்தியது. அந்த நேரத்தில் இதற்கு பல வித எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய சில புதிய அளவுகோள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நம்பினார். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் கணக்கிடப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது. .

சம்பளம் நேரடியாக 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக அதிகரிக்கலாம்

ஏழாவது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு இருந்தது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 

அதே நேரத்தில், எட்டாவது ஊதியக் குழுவின் கீழ், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு இருக்கலாம் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதமாக உயரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் நேரடியாக ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம்.

8வது ஊதியக் கமிஷன் எப்போது அமல்படுத்தப்படும்? 

தற்போது, ​​எட்டாவது ஊதியக் கமிஷன் தொடர்பாக மத்திய அரசால் எந்த விதமான முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை. மறுபுறம், 2024 ஆம் ஆண்டில் எட்டாவது ஊதியக் கமிஷனை அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம் என்றும் அது 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதை நடைமுறைப்படுத்த, 2024ல் சம்பள கமிஷனும் அமைக்கப்படலாம். அதே நேரத்தில், நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு அரசு விரைவில் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.