காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா விழாவை முன்னிட்டு பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் தா்காவில் நிகழாண்டு 200-ஆவது ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு எம்எல்ஏ நாஜிம் அவர்கள் விடுமுறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை வெளியாகியுள்ளது.
அதே சமயம் 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.