உக்ரைனிய மருத்துவர் தங்குவதற்கு தனது வீட்டை கொடுத்த ரஷ்ய நோயாளி!


கொரானா நோய் தொற்றிலிருந்து தன்னை காப்பாற்றிய உக்ரைனிய மருத்துவருக்கு தங்குவதற்கு வீடு கொடுக்க முன் வந்த ரஷ்யரின் செயல் கடுமையான இப்போர் காலத்தில் மக்களை நெகிழ வைத்துள்ளது.

நோயாளியை காப்பாற்றிய டாக்டர்

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஓல்கா பான்டாஸ், 42 வயது நிறைந்த மருத்துவர் கொரானா காலத்தில் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தாராசோவ் என்பவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த போது க்ளூசெஸ்டர்ஷயரில் உள்ள தனது இரண்டாவது வீட்டைப் பயன்படுத்துமாறு ரஷ்யரான தாராசோவ் தனது மருத்துவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைனில் போர் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் தனது உயிரைக் காப்பாற்றிய ஓல்கா பான்டாஸை இங்கிலாந்து வருமாறு அழைத்துள்ளார்.

உக்ரைனிய மருத்துவர் தங்குவதற்கு தனது வீட்டை கொடுத்த ரஷ்ய நோயாளி! | Russian Patient Rescue Ukraine Lady In Uk @OLGA_ PANTAS

இங்கிலாந்து சென்ற மருத்துவர்

உக்ரைனிய விமான நிறுவனத்தில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் தாராசோவ், லண்டனில் உள்ள தனது முதன்மை இல்லத்தில் வசித்து வருகிறார்.  

கடந்த 2022ல் ரஷ்ய படைகள் படையெடுத்த போது டாக்டர் பாண்டாஸ் செமனிவ்கா கிராமத்தில் இருந்திருக்கிறார். கடுமையான சண்டையின் போது அவர் தனது 15 மற்றும்7 வயது குழந்தையுடன் இருந்திருக்கிறார். அந்த சண்டையில் அவர் தனது தாயை இழந்துள்ளார்.

உக்ரைனிய மருத்துவர் தங்குவதற்கு தனது வீட்டை கொடுத்த ரஷ்ய நோயாளி! | Russian Patient Rescue Ukraine Lady In Uk@Supplied

அதன் பின் இரண்டு மாதங்களுக்கு பிறகு மருத்துவர் இங்கிலாந்து செல்ல அவசர விசா கேட்டுள்ளார். தற்போது அவர் ஸ்விண்டனில் உல்ல கிடேட் வெஸ்டர்ன் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். அவரது குழந்தைகளும் அவரோடு புதிய வீட்டில் குடியேறியுள்ளனர். தானும் தன் குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் தனது ரஷ்ய நண்பரான தாராசோவுக்கு நன்றியுள்ளவராகயிருப்போம் என மருத்துவர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க போரில் பல உயிர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் சக மனிதர்களிடையே மனித நேயத்தை விதைக்கும் வகையில் இந்த இரஷ்யரது செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.