மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது காதலிக்காக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
71 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் , 1999-ல் அரசியலில் நுழைந்து அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினின் நம்பிக்கைகுரியவரக இருந்தார். போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தவுடன் செயல் அதிபராக புடின் பொறுப்பேற்றார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். அதன்பின் நடந்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று அதிபராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் ரஷ்யாவின் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா காபாயிவா, 39 என்பவருடன் புடினுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அலினா காபாயிவாவை மனைவி என அறிவிக்காமல் பல ஆண்டுகள் ரகசியம் காத்து வருகிறார்.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியி்ல், அதிபர் புடின் தனது வருமானம் முழுவதையும் காதலி அலினா காபாயிவாவுக்கு தான் செலவு செய்கிறார். சமீபத்தில் தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்கு நகரான வால்டாஸ் லேக் பகுதியில் ‘வில்லா” ஒன்றையும், ”மேன்சன்” (தங்கும் விடுதி ) ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளார். இவ்வாறு அதில் செய்தி வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement