
சென்னையில் நாளை (02.03.2023) மின்தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதி : மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, வெங்கடமங்களம் மெயின் ரோடு, திருமால் நகர் பல்லாவரம் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேஷன் சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பம்மல் அண்ணாசாலை, மா.பொ.சி தெரு, அப்துல்கலாம் ரோடு மற்றும் முத்துபழனியப்பா நகர்.

அம்பத்தூர் பகுதி : என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
newstm.in