தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த ரிசார்ட்…விண்ணை முட்டும் ஒரு நாள் இரவு விலை!


உலகின் மிகவும் விலையுயர்ந்த ரிசார்ட்டாக துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ராயல் ரிசார்ட் கருத்துப்படுகிறது, இதில் ஒரு நாள் இரவு கட்டணம் சுமார் 82.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உலகின் மிக விலையுயர்ந்த ரிசார்ட்

மத்திய கிழக்கு நாடான துபாய் எப்போதும் அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடம்பர வசதிகள் மற்றும் பிரம்மாண்டத்தை வாரி வழங்கும் இடமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஆடம்பரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும் விதமாக, துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ராயல் ரிசார்ட் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஓய்வு விடுதியாக திகழ்ந்து வருகிறது.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த ரிசார்ட்…விண்ணை முட்டும் ஒரு நாள் இரவு விலை! | World Expensive Resort Dubai Atlantis The RoyalFRANCOIS NEL/GETTY IMAGES FOR ATLANTIS DUBA

அறைகள் மற்றும் கட்டணங்கள்

Atlantis The Royal ரிசார்ட்டில் மொத்தம் 800 அறைகள் உள்ளன, அவற்றில் மிகவும் விலை உயர்ந்த அறையான ராயல் மேன்ஷன் அறையின் ஒரு நாள் இரவுக்கான விலை சுமார் USD 100,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்திய ரூபாய் அடிப்படையில் கிட்டத்தட்ட 82.5 லட்சமாகும்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த ரிசார்ட்…விண்ணை முட்டும் ஒரு நாள் இரவு விலை! | World Expensive Resort Dubai Atlantis The RoyalATLANTIS DUBAI

அதே சமயம் Atlantis The Royal ஹோட்டலில் உள்ள மலிவான அறையின் விலை சுமார் 4,134 திர்ஹாம்கள் (ரூ.92,000) ஆகும். நடுத்தர விலைகள் கொண்ட பனோரமிக் பென்ட்ஹவுஸ் அறைகள் சுமார் USD 36,000(30 லட்சம்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள்

அட்லாண்டிஸ் ஹோட்டலின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக அறைகள் மற்றும் லாபிகளில் உள்ள தங்கம் மற்றும் பளிங்கு அலங்காரங்கள் பார்க்கப்படுகின்றன.

அத்துடன் ஹோட்டல் சுவர்கள் உண்மையான தங்க வால்பேப்பரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன மற்றும் குளியலறைகள் இத்தாலிய பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளன.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த ரிசார்ட்…விண்ணை முட்டும் ஒரு நாள் இரவு விலை! | World Expensive Resort Dubai Atlantis The RoyalFRANCOIS NEL/GETTY IMAGES FOR ATLANTIS DUBA

மேலும் இந்த அதி-சொகுசு ஹோட்டலில் 17 பிரபல நிறுவனங்களின் உணவகங்கள், பார்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய மீன்வளம் உள்ளடக்கிய கட்டமைப்புகள் உள்ளன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.