திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர். நகர் பகுதியில் ஆறு கடைகளைக் கொண்ட தனியார் வணிக வளாகம் ஒன்றுள்ளது. அந்த வளாகத்தில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை என்று மொத்தம் ஐந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில், ஒரு கடை மட்டும் காலியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இந்த கடைகளில் கொள்ளையர்கள் சிலர் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அவற்றில் கொள்ளையர்கள், மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும், அந்தக் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இன்று காலை கடை உரிமையாளர்கள் கடையை திறக்க வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர் கடை உரிமையாளர்கள் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.