தைவானை நோக்கி படையெடுத்த சீன போர் விமானங்கள்: வழங்கப்படும் தக்க பதிலடி


சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்கள் ஆகியவை தைவான் பகுதிக்குள் அச்சுறுத்தும் விதமாக நுழைந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துமீறும் சீனா

உலக அரங்கில் தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக  செயல்பட்டு வரும் நிலையில், சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது.

மேலும் அமெரிக்காவுடன் தைவான் நெருக்கம் காட்டி வருவதை சீனா வெளிப்படையாக எதிர்த்து வருவதுடன், தைவானை அச்சுறுத்தும் விதமாக இராணுவ அத்துமீறல்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

தைவானை நோக்கி படையெடுத்த சீன போர் விமானங்கள்: வழங்கப்படும் தக்க பதிலடி | China Warships Jets Enter Into Taiwan Territory

இந்நிலையில் தைவான் ஜலசந்தியை நோக்கி  சீனா  25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்க்கப்பல்களை அனுப்பி வைத்து இருப்பதாக  தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

பதிலடி

இது தொடர்பாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தைவானின் வான்பரப்பில் சீனாவின் 19 போர் விமானங்கள் நுழைந்துள்ளது.

அதைபோல சீனாவின் போர் கப்பல்களும் தைவான் ஜலசந்தியில் இயங்கி கொண்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானை நோக்கி படையெடுத்த சீன போர் விமானங்கள்: வழங்கப்படும் தக்க பதிலடி | China Warships Jets Enter Into Taiwan Territory

ஆனால் சீனாவின் அத்துமீறல்களை தைவான் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் கடலோர ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக நெருக்கமாக கண்காணித்து பதிலடி கொடுத்து வருவதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.