கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வயலில் சடலம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த சஜேதி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வயலில் 6 வயது பட்டியலின சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் அந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் அங்கிதா சர்மா கூறுகையில், ‘கடந்த 25ம் தேதி கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு ராம் பிரகாஷ் என்பவரின் 6 வயது சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. போலீசில் பெற்றோர் புகார் அளித்ததின் அடிப்படையில் சிறுமியை தேடி வந்தோம். இந்த நிலையில் சஜேதி பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இருந்தும் முழுமையான அறிக்கை கிடைத்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.