'யானையாக பிறக்கவேண்டும்' மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட இளவரசர் ஹரியின் ஆசை!


பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மாரு ஜென்மத்தில் யானையாக பிறக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட ஹரி

இளவரசர் ஹரி மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். தனது அடுத்த பிறவியில் அவர் ஒரு யானையாக பிறந்து வரவேண்டும் என ஆசைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார்.

இளவரசர் ஹரி (38) மனைவி மேகன் மார்க்கலுடன் (Meghan Markle) ‘தி லேட் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று ஹரி நம்புவது என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரி, அவர் ஒரு நாள் யானையாக பூமிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

TNI Press

ஹரி தனது பதிலில், அடுத்த ஜென்மத்தில் “நாம் விலங்குகளாக மாறுகிறோம் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

அவ்வாறு ஒரு விலங்காக பிறந்து வருவதனால், எந்த விழுங்காக பிறக்க ஆசை என கேட்கப்பட்டதற்கு “ஒரு யானை” என்று நச்சென பதிலளித்தார்.

என் மனைவியின் வாசனை!

அதனைத் தொடர்ந்து, தனது எதிர்காலத்தை விவரிக்கும் என்று ஹரி நம்பும் ஐந்து வார்த்தைகளை கூறுமாறு கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரி: “சுதந்திரம், மகிழ்ச்சி, தெளிவு, வெளி, காதல்.” என கூறினார்.

அவருக்குப் பிடித்த வாசனையைக் கேட்டதற்கு “என் மனைவி” என்று இனிமையாகப் பதிலளித்தார்.

மேலும், Finley Quaye’s ‘Your Love Gets Sweeter Every Day’ பாடலை தனது வாழ்நாள் முழுவதும் விரும்பி கேட்கக்கூடிய ஒரே பாடலாக ஹரி கூறினார். இதுபோன்ற பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்த ஹரி, மேலும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மறுத்தார்.

TNI Press



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.