கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் கிராமத்தில் கோயில் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, ஒரு தனிநபர் மின்வேலி அமைத்து பயன்பாட்டில் வைத்திருப்பதாக கடந்த நவம்பர் மாதம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை வருவாய் ஆய்வாளர் ரஞ்சிதா, கிராம உதவியாளர் மகாத்மா, ஊராட்சி மன்றத் தலைவர் கமலநாதன் ஆகியோர் எருக்குவாய் கிராமத்தில் நேரில் ஆய்வு நடத்தி, கோயில் மற்றும் அரசு நிலங்களில் தனிநபரின் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி, 25 சென்ட் நிலத்தை மீட்டு, அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.