ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிற்கும் 16 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் என்ற அடிப்படையில் மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார். இளங்கோவனுக்கு 250 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 104 தபால் வாக்குகளும் பதிவாகின. முதல் இரு சுற்றுகள் வரை தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

வாக்கு எண்ணிக்கையில், இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை பெற்ற நிலையில், 4ஆவது சுற்றுக்கு பிறகு அதிமுகவின் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது, அவர் தேர்தலில் பணநாயகம் வென்றதாகவும், ஜனநாயகம் தோற்றதாக கூறினார்.

இடைத்தேர்தலில், நோட்டாவிற்கு 583 பேர் வாக்களித்தனர்….

மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் சுயேட்சையாக போட்டியிட்ட 27 பேர் ஒற்றை இலக்க வாக்குகளையே பெற்றனர். அதில், 2 பேர் தலா ஒரு ஓட்டு மட்டும் பெற்றிருந்தனர். மேலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை.

ஈரோட்டில் பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக கூறினார். 

காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ததால், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.