ஈரோடு கிழக்கு: அதிமுக பின்னடைவுக்கு யார் காரணம்? பொன்னையன் பதில்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல் நாகு சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போது வரை காங்கிரஸ் கட்சி 36,723 வாக்குகளையும், அதிமுக 12,297 வாக்குகளையும் நாம் தமிழர் 2032 வாக்குகளையும் பெற்றுள்ளன. தேமுதிக 326 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதிமுக பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் சமயம் தமிழ் சார்பாக அதிமுகவைச் சேர்ந்த பொன்னயனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “பணநாயகம் வென்றது. திமுக பணத்தை கொட்டி இந்த தேர்தலை சந்தித்தது. நாங்கள் வாக்கு சேகரிக்க சென்ற போது வீட்டில் யாருமே இல்லை, எல்லோரையும் பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து பட்டியில் அடைத்து வைத்து புது ஃபார்முலாவை உருவாக்கியது திமுக.

ஓ.பி.எஸ், தினகரன், சசிகலாவுக்கு 1% வாக்கு கூட கிடையாது, அதனால் தான் தலை தெறித்து ஓடினார்கள். இந்த தேர்தல் முடிவுகள் அதிமுக தலைமையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் மூன்று பேரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம்” என்று கூறினார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தீர்களா என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், “அதற்கு என்னிடம் பதில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் வீடு வீடாக சென்று திமுகவின் தவறுகளை சுட்டிக் காட்டி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.