ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று இருந்தார்.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குக்கள் தற்போது 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி :
காங்கிரஸ் – 10952
அதிமுக – 3305
நாம் தமிழர் – 615
தேமுதிக – 99
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே பேசப்பட்டதுபோல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.