புதுடில்லி:உலகளவில் பல நாடுகள் பங்கேற்கும் தன்மை ஆபத்தில் உள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, ஒரே மாதிரியான நடைமுறை தோல்வியடைந்துள்ளது எனக்கூறியுள்ளார்.
ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பல நாடுகள் பங்கேற்பது பிரச்னையில் உள்ளதை நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளான அனுபவங்களில் நிதி பிரச்னை, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பயங்கரவாதம் மற்றும் போர்கள் ஆகியவை, உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை ஆகியவை தோல்வியை சந்தித்துள்ளது தெளிவாக காட்டுகிறது.
பல வருட முன்னேற்றத்திற்கு பிறகு, நாம் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்லும் அச்சுறுத்தலில் உள்ளோம். பல வளரும் நாடுகள், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முயலும் நேரத்தில், தாங்க முடியாத கடன்சுமையில் திணறி வருகின்றன.
பணக்கார நாடுகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்ற அபாயங்களால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்தினால் தான் தெற்கு நோக்கி ஜி20 மாநாட்டில் இந்தியா குரல் கொடுத்து வருகிறது. பிரிவினை பிரச்னைகளுக்கு, பொதுவான தீர்வுகளை உலக தலைவர்கள் கண்டறிய வேண்டும்.
ஆழ்ந்த சர்வதேச பிரிவினை நேரத்தில் நாம் கூடியுள்ளோம். இந்த அரங்கில் இல்லாதவர்களுக்கு நாம் பொறுப்பாக உள்ளோம். நாம் ஒன்றாக தீர்க்க முடியாத பிரச்னைகளை, நமது வழியில் அனுமதிக்கக்கூடாது. நம்மை ஒற்றுமைப்படுத்துவது எது, பிரிவினை ஏற்படுத்துவது எது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement