காதலியுடன் உல்லாசமாக வாழும் ரஷ்ய அதிபர்; ரஷ்ய ஊடகம் குற்றச்சாடு.!

போர் நடக்கும் சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது காதலியுடன் உல்லாசமாக வாழ்ந்து வருவதாக ரஷ்ய புலனாய்வு பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு பயணம் செய்தார். அதுமட்டுமில்லாமல் உக்ரைனுக்கு அதிகளவிலான நவீன ஆயுதங்களை வழங்கவும் ஒப்புதல் வழங்கினார். போரை நிறுத்த வழி சொல்லாமல், போரை நீட்டிக்க அமெரிக்க அதிபர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்படது.

அதைத் தொடர்ந்து போரை நிறுத்தக் கோரி மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் போராட்டமும் நடைபெற்றது. மேலும் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பட்சத்தில், சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தும் வகையில் சீன அதிபர் ஷி ஜிங்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளார். இப்படி ரஷ்யா உக்ரைன் போர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் தனது காதலியுடன் சுகமாக வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது காதலியுடன் மாஸ்கோவின் வடமேற்கே உள்ள 120 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களாவில் தங்கியிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கையான தி ப்ராஜெக்ட்டின் தெரிவித்துள்ளது. அதேபோல் அதன் அறிக்கையின்படி, புடின் சைப்ரஸில் உள்ள ஸ்லஷ் ஃபண்ட் அதாவது பொது நிதியின் மூலம் இந்த சொத்தை வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சொத்தின் கட்டுமானம் 2020 இல் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்ததாக அறிக்கை கூறியுள்ளது. இந்த மாளிகை கிட்டத்தட்ட 13,000 சதுர அடி மற்றும் ரஷ்ய டச்சா பாணியில் முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டது. புடினின் புதிய சொத்து வால்டாய் ஏரியில் அமைந்துள்ளது. நாட்டு தோட்டத்தில் பல அரண்மனை மாளிகைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது.

புடினின் காதலியான 39 வயதான அலினா கபேவா ஒலிம்பிக் ரிதம் சாம்பியன் ஆவார். ரஷ்ய அதிபருடன் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்த கபேவா, 2014 இல் புடினால் ரஷ்யாவின் தேசிய ஊடக குழுவை வழிநடத்த நியமிக்கப்பட்டார்.

இந்த உயர் பொறுப்பு மூலம் அவருக்கு ஆண்டு வருமானம் சுமார் 8.6 மில்லியன் பவுண்டுகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த பங்களா குறித்து முதன்முதலில் 2021 இல் சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் குழுவால் புகாரளிக்கப்பட்டது, அவர் சொத்துக்களைக் கட்ட பட்ஜெட் நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

ஸ்டாலினிடம் பிடித்த குணம்? – விழுப்புரம் மக்கள் கருத்து!

அவரது குற்றச்சாட்டுக்கள் பெயரிடப்படாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி, புடின் மற்றும் அவரது காதலியின் குழந்தைகள் அடிக்கடி மாளிகையின் வளாகத்தில் காணப்படுவதாகவும், அலினா கபீவாவின் சில பெண் உறவினர்களும் காணப்பட்டதாகவும் கூறியது.

ஈரானின் புதிய ஏவுகணை..ட்ரம்பை கொல்ல காத்திருக்கிறோம்..ராணுவ தளபதி பேட்டி.!

ஆனால் புடினின் தனிப்பட்ட விருந்துகளில் கலந்து கொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள், ரஷ்ய அதிபரையும் அவரது காதலியையும் தாங்கள் இதுவரை ஒன்றாகப் பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இருவரும் ஒரு உறவில் இருந்ததில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் ரஷ்ய அதிபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அமெரிக்க சார்பு மேற்கத்திய ஊடகங்களின் வேலை தான் இது என ரஷ்ய ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். அதிபர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் புடினே இல்லை என மேற்கத்திய ஊடகங்கள் பரப்பியதையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.