வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஏதென்ஸ்: கிரீசில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழப்பிற்கு மோசமான ரயில் நிர்வாகம் காரணம் என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு கடந்த பிப்.,01ம் தேதி 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தன.
![]() |
இந்த விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில் ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் காரணமாக இப்படி ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது என கூறி ரயில்வேயின் மோசமான நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள், இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement