பெ.நா.பாளையம்: கோவை ஆனைக்கட்டி மலை அடிவாரத்தில் மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு காட்டு யானைகள் வருவது வழக்கம். காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக விவசாயிகளும், மலை அடிவார மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாங்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை திடீரென ஊருக்குள் புகுந்தது.
அதே பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (38) என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, யானை சுற்றித்திரிவதை பார்த்ததும் ஓட முயன்றார். அதற்குள் யானை அவரை தாக்கி பரிதாபமாக இறந்தார். இதேபோல் ஆனைகட்டி மலைப்பகுதி துவைபதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மருதாசலம். இவர், நேற்று அதிகாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வெளியே வந்போது, காட்டு யானை வழிமறித்து தாக்கியது. இதில் அவர் இறந்தார்.