மேகாலயா சட்டமன்ற தேர்தல் : 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதிகபட்சமாக ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வென்றுள்ளது, இரண்டாவதாக ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆளும் தேசிய மக்கள் கட்சி கேட்கும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக பாஜகவின் ஆதரவை கோரியுள்ளது.

மேகாலயா சட்டமன்ற தேர்தல் முடிவில் கவனிக்க தக்க விஷயம் என்னவென்றால், மேகாலயாவின் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தது. அப்போது 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தையும், ஐக்கிய ஜனநாயகக் கட்சியிடம் இழந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை கடந்த தேர்தலை போலவே தற்போதும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.