துபாய் விடுதியில் ஒர் இரவு தங்க ரூ.82 லட்சம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரங்களில் ஒன்றான துபாய், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர 2010-ம் ஆண்டு துபாயில், உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபா கட்டப்பட்டது. புர்ஜ் கலீஃபா உயர்தர நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ‘அட்லான்டிஸ் தி ராயல்’ என்ற அதிஉயர்தர நட்சத்திர விடுதி திறக்கப்பட்டுள்ளது.

விடுதியின் நுழைவு வாயிலிலிருந்து குளியலறையில் உள்ள துண்டு வரையில் ஒவ்வொன்றும் உலகின் உயர்தர தயாரிப்புகளாகும். மாலை நேரங்களில் உலகின் முன்னணி கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த விடுதியின் திறப்பு விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகி பியான்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த ஒரு இரவு நிகழ்ச்சிக்காக அவருக்கு 24 மில்லியன் டாலர் (ரூ.200 கோடி) வழங்கப்பட்டது. இந்த விடுதியில் 795 அறைகள், 17 உணவு மற்றும் மதுபான விடுதிகள், 92 நீச்சல் குளங்கள் உள்ளன. அறையின் ஒரு நாள் கட்டணம் 1000 டாலரில் (ரூ.82 ஆயிரம்) தொடங்கி 1 லட்சம் டாலர் (ரூ.82 லட்சம்) வரை செல்கிறது. இந்த விடுதியை பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.