பருத்திவீரன் படத்தில் டீக்கடைக்காரராக நடித்து பிரபலமானவர் நடிகர் ஒத்தக்கடை ஆறுமுகம். இவர் தாமிரபரணி, சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் சாப்பிட்டு வருவதாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் பாலிமர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இரு வாரங்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
அங்கு எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் என்னிடம் கையில் பணம் ஏதும் இல்லை. இதனால் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி செய்ய வேண்டு் என கோரிக்கை விடுத்துள்ளார்.