மதுரை மாவட்டத்தில் தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (59). இவர் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மநாதன் அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரை ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண் ஊழியர் பலமுறை கண்டித்தும் பத்மநாதன் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் ஊழியர் இது குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தெற்கு மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டு தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஊழியரான பத்மநாபனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.