புதுடில்லி, புதுடில்லியில் நடந்த மகளிர் நலனுக்கான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பில்கேட்ஸ் இருவரும் இணைந்து தயாரித்த நவதானிய கிச்சடி, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது.
‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரும், ‘பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளையின் அறங்காவலருமான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார்.
இந்த அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், புதுடில்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் கலந்து கொண்டார்.
‘ஊட்டச்சத்து மூலம் அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் பில்கேட்ஸ் பங்கேற்றார்.
அப்போது, ஊட்டச்சத்து மிக்க நவதானிய கிச்சடியை இருவரும் இணைந்து தயார் செய்தனர். பின், அங்கிருந்த கர்ப்பிணிகளுக்கு, இதை அவர்கள் வழங்கினர்.
கேட்ஸ் அறக்கட்டளை, கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில், நோய் தடுப்பு, தாய் — சேய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement