திருப்பதி,
”திருமலையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம், சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது,” என, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று தெரிவித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று கூறியதாவது:
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் இருப்பதை உறுதி செய்வோம். இதற்காகவே, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் திருமலையில் மார்ச் 1ம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது.
திருமலையில் இடைத்தரகர் முறையை முற்றிலுமாக குறைக்க, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் பொதுமக்களை முறையாகவும், விரைவாகவும் சென்றடையும்.
திருமலையில் சர்வதரிசன வரிசை. லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணம் திரும்பப் பெறுதல் கவுன்டர்கள் போன்றவற்றில் இது சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது.
இதனால், லட்டுகளை புரோக்கர்கள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது; அறைகளுக்கு பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு விரைவாக அறைகள் கிடைத்து வருகின்றன.
இவ்வாறு அவர் ூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement