வாலிபர்கள் மூழ்கி பலி எதிரொலி: படவேடு கமண்டல நதியில் பாதுகாப்பு வேலி அமைப்பு

கண்ணமங்கலம்,:  சென்னை வாலிபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் படவேடு கமண்டல நதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு ராமர் கோயில் அருகே கமண்டல நதி பாய்ந்தோடுகிறது. அங்கு வால்பாறை எனும் வழுக்கு பாறைகள் உள்ளன. இந்த இடத்தில் இதுவரை குளிக்க சென்ற 10 பேர் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் இதே இடத்தில் பாறையில் வழுக்கி ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனால், இந்த இடத்தில் தடுப்பு வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறை சார்பில் பாதுகாப்பு வேலி  அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடம் மிகவும் அபாயகரமான, ஆழமான பகுதியாகும். யாரும் போக கூடாது. மீறினால் சட்டப்படி நடைவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.