பெரும்பாலும் அனைவரினதும் நாக்கும் இனிப்பான உணவிற்கே அடிமை.
திருமணம், பண்டிகை, தொழில் ரீதியான சந்திப்புகள் என்று எந்த விடயமாக இருந்தாலும் கட்டாயமாக இனிப்புகள் இல்லாமல் இருக்காது. .
அதில் ஒன்று தான் பால்கோவா. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனை கடைகளில் வாங்காமல் எளியமுறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம்.
அந்த வகையில் சுவையான ஒரு பால்கோவா செய்யலாம் என்று பார்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்கள்,
- பால் – 1 லீட்டர்
- சீனி – 250 கிராம்
- ஏலக்காய்
- நெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் பாலில் இருந்து ஆடை திரண்டும் வரும் வரை கலந்து விடவும்.
- அதன் பின்னர் சீனி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- ஏலக்காய் சிறிதளவும் நெய் ஒரு தே.கரண்டியும் சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர் 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இரக்கினால் சுவையான பால்கோவா தயார்.
