75 வயதில் காதல் திருமணம்! கன்னம் சிவக்க மணப்பெண்ணாக ஜொலித்த மூதாட்டி


மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியோர் இல்லத்தில் சந்தித்த 70 வயது அனுசுயா ஷிண்டே என்ற மூதாட்டியை பாபுராவ் பாட்டீல் என்ற முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முதுமையில் பூத்த காதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தித்து கொண்ட 75 வயது முதியவரும் 70 வயது மூதாட்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வாழ்க்கை துணையை இழந்து, பின் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பாபுராவ் பாட்டீல்(75)-அனுசுயா ஷிண்டே(70) ஆகிய இருவரும் முதியோர் இல்லத்தில் சந்தித்து காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வாகோலியைச் சேர்ந்த அனுசுயா ஷிண்டே மற்றும் ஷிவ்னக்வாடியைச் சேர்ந்த பாபுராவ் பாட்டீல் ஆகிய இருவருக்கும் ஷிரோல் தாலுகாவின் கோசர்வாட்டில் உள்ள ஜானகி முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் இரண்டு ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

75 வயதில் காதல் திருமணம்! கன்னம் சிவக்க மணப்பெண்ணாக ஜொலித்த மூதாட்டி | Old Man Marries 70 Year Old Girlfriend Maharashtra



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.