ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 10 வது சுற்றை கடந்து 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடைபெற்ற அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
மேலும் இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கை விட அவர் அதிக வித்தியாசத்தில் அவரின் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
மொத்தம் இந்த இடத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில், அதில் 76 ஆயிரம் வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக டெபாசிட் தொகைக்கான 28 ஆயிரம் வாக்குகளை கடந்துள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி 6123 வாக்குகளை பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் தேமுதிக வேட்பாளர் 852 வாக்குகளை பெற்றுள்ளார்.
தற்போது வரை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இன்னும் 5 சுற்றுகளை மீதம் உள்ளது. இதன் காரணமாக அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை தவிர மீதி உள்ள நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையான பத்தாயிரம் ரூபாயை இழக்கின்றனர்.