ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜன. 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். தொடர்ந்து இந்த தேர்தலின் வாக்குபதிவு பிப். 27ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை செலுத்தினர். அவ்வபோது வாக்குபதிவு பதிவு சதவீதம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம், 74. 79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, 6 மணிக்கு பின்னரும், பல வாக்குச்சாவடிகளில் டோக்கன் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு சிறிதுநேரம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடைபெற தொடங்கிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது அதன் பிறகு 238 வாக்கு சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களுடைய வாக்கு வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங். முன்னிலை பெற்றதால் திமுக, காங். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை சற்று தாமதம் ஆனது. கிட்டத்தட்ட 10,000 வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளார். ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து மற்றும் இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.