Meghalaya: முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? கானல் நீராகுமா?

Assembly Election Results Mehalaya 2023: மேகாலயாவில், கான்ராட் சங்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், NPP அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும், . அவர் நம்புகிறார். NPP அதன் முன்னாள் கூட்டாளியான BJP-யிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முறிந்தது. தற்போது என்.பி.பி அனைத்து 60 இடங்களிலும் போட்டி போட்டுள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்கியது. மேகாலயாவைத் தவிர, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய இரு வடகிழக்கு மாநிலங்களிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

மேகாலயா சட்டப் பேரவையின் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது, வாக்குப்பதிவு முடிந்த பிறகு 85.17 சதவீத வாக்குகள் பதிவாகின. மேகாலயாவில் சோஹியோங் தொகுதியில் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா, தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பேன் என்று கூறும் நிலையில், கான்ராட் சங்மாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP) அதன் பிரிந்த கூட்டாளியான பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதால், முதல்வராகும் கான்ராட் சங்மாவின் கனவு, நனவாகுமா? இல்லை கானல் நீராகுமா? என்ற கேள்விக்கான பதில் இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

ஒரு காலத்தில் சிறிய பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து மேகாலயாவை ஆட்சி செய்த ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், மேகாலயாவில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அதே வேளையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் மேகாலயாவில் செல்வாக்கு செலுத்தும் முனைப்பில் உள்ளது.

கான்ராட் பதவியில் இருக்கும் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்சிகளில் பிற கட்சிகள் மும்முரமாக உள்ளதால், நிலைமையை அரசியல் நோக்கர்கள் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா, சமீபத்தில் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய முகமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.