ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா 2-வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் இன்று இலங்கை சார்பில் நடத்தப்படுகிறது.
