பாலகிருஷ்ணாவிடம் பாராட்டை பெற்ற வாத்தி.. தெலுங்கில் சாதனை படைத்த தனுஷ்!

தெலுங்கில் பாஸ் ஆன வாத்தி :

கடந்த மாதம் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது தொடர்ச்சியாக விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களிலே 30 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பின்பு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பாராட்டுகளை வாங்கி வந்த நிலையில் மேலும் 50 கோடிக்கு மேலான வசூலை பெற்று மற்றுமொரு சாதனை படைத்தது.

பாலகிருஷ்ணாவின் பாராட்டை பெற்ற படக்குழுவினர் :

இந்நிலையில் நேற்று வாத்தி திரைப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, வாத்தி திரைப்படத்தின் இயக்குனரான வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளர் இருவரையும் பெரிதும் பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனுஷ் தமிழ், ஹிந்தி மொழிகளில் பிரபலமானதை அடுத்து தற்போது தெலுங்கிலும் அவருக்கான இடம் உருவாகியுள்ளது.

Vanangaan: கழட்டி விட்ட சூர்யா: ஆட்டத்தை ஆரம்பித்த பாலா..!

தமிழ் நடிகர்கள் தற்போது தமிழ் மொழியையும் தாண்டி அவர்களின் திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாக வேண்டும் என நினைக்கின்றனர் என சினிமா விமர்சகர்கள் பலர் கூறி வருகின்றனர். அதற்கு காரணமாக இருப்பது கடந்த ஆண்டு மாபெரும் பொருட்செலவில் உருவாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற RRR, KGF-2, விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களின் Pan India வெற்றி தான். அதற்கு ஒரு தொடக்கமாக தான் தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் ஆரம்பக்கட்ட முயற்சியாக இருமொழி திரைப்படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழ் நடிகர்கள் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துவது போல சில ஆண்டுகள் முன்பு தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு போன்ற நடிகர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வந்தனர். தமிழில் இயக்குனர் லிங்குசாமி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஒரு திரைப்படம் தொடங்கி பின்பு நடைபெறாமல் போனது. அதன் பிறகு மகேஷ்பாபு – முருகதாஸ் கூட்டணியில் ஸ்பைடர் திரைப்படம் உருவானது. பிறகு பாகுபலி-2 திரைப்படத்தின் Pan India வெற்றிக்கு பிறகு இந்த கலாச்சாரம் இல்லாமல் இருந்தது தற்போது மீண்டும் வாத்தி திரைப்படம் மூலம் தொடங்கியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேப்டன் மில்லர் :

மேலும் வாத்தி திரைப்படத்தை பொறுத்தவரை தெலுங்கு ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒரு நடிகராக தனுஷ் தற்போது மாறியுள்ளார். மேலும் வாத்தியின் வசூல் ரீதியான வெற்றியால் தெலுங்கிலும் தனுஷிற்கு நேரடியாக ஒரு வியாபாரம் உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனுஷ்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களில் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஆந்திராவை சேர்ந்த விநியோகஸ்தாரர்கள் கூறிவருகின்றனர். மேலும் தனுஷ்-க்கு அடுத்து வெளியாகவிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.