வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை, அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக மோடி வெளியிட்ட அறிக்கை: பில்கேட்சை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலேசனை நடத்தினோம். சிறந்த மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதற்கான அவரது கொள்கை தெளிவாக தெரிகிறது எனக்கூறியுள்ளார்.

பில்கேட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடியுடனான எனது சந்திப்பானது, சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement