ஜகார்தா-இந்தோனேஷியாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவில், மிகப்பெரிய பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில், நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சேமிப்பு கிடங்கின் பல பகுதிகளுக்கு பரவியது.
இதனால், அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. ஆரஞ்சு ஜுவாலைகளாக மாறி பற்றி எரிந்த தீ, அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.
பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர்.
சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்டோர், தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த கோர விபத்தில், 15 பேர் பலியாகினர்; படுகாயங்களுடன் போராடிய 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வீடுகளில் இருந்து வெளியேறிய 16 பேர் மாயமான நிலையில், இவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுஉள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இடி விழுந்ததில், எண்ணெய் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்