பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு: கலவரத்தில் முடிந்த பழங்குடி மக்கள் போராட்டம்


கொலம்பியாவில் சாலை விதிகளை மேம்படுத்தி தர கோரி பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சாலை வசதிகள் கோரி போராட்டம்

கொலம்பியாவின் கக்கெட்டாவில் உள்ள பழங்குடி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், சாலைகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என்று அங்குள்ள எண்ணெய் மற்றும் சுரங்க நிறுவனங்களிடம் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர்.

சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள் செல்லும் சாலையில் பழங்குடி மக்கள் தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்ட போராளி குழுவினர் துப்பாக்கி சூட்டில் இறங்கினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போராட்டம் வன்முறையாக வெடித்தது.

பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு: கலவரத்தில் முடிந்த பழங்குடி மக்கள் போராட்டம் | 79 Police Officers Taken Hostage In ColombiaReuters 

சிறைபிடிக்கப்பட்ட பொலிஸார்

இதற்கிடையில் 79 பொலிஸாரையும், 9 எண்ணெய் நிறுவன ஊழியர்களையும் பணயக் கைதிகளாக அப்பகுதி பழங்குடி மக்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள், காவல்துறை மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக சிறைபிடிப்பு: கலவரத்தில் முடிந்த பழங்குடி மக்கள் போராட்டம் | 79 Police Officers Taken Hostage In ColombiaTwitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.